ADVERTISEMENT

UAE: ரமலானை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா..!!

Published: 30 Mar 2022, 2:31 PM |
Updated: 30 Mar 2022, 2:37 PM |
Posted By: admin

அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நடத்தப்படும் தராவீஹ் தொழுகைக்காக மசூதிகளுக்கு அருகில் இலவச வாகன நிறுத்துமிடத்தை ஷார்ஜா அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் ஒபைத் சயீத் அல் துனைஜியின் கூற்றுப்படி, பொது வாகன நிறுத்தம் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் அப்போது கட்டணம் செலுத்தி வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தராவீஹ் தொழுகை நடைபெறும் நேரங்களில் மசூதிகளுக்கு அருகில் இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஆய்வாளர்கள் கார்களை சரியான முறையில் நிறுத்துவதை உறுதி செய்வார்கள் மற்றும் விதி மீறல்கள் புரிவதை தடுப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஷார்ஜா முனிசிபாலிட்டானது அனைத்து பொது மக்களுக்கும் ஏதேனும் மீறல்கள் அல்லது எதிர்மறையான நடத்தைகளை ஹாட்லைனை அழைப்பதன் மூலம் புகாரளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT