ADVERTISEMENT

துபாய்: ரமலான் மாதத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டண நேரத்தை அறிவித்த RTA..!!

Published: 1 Apr 2022, 3:34 PM |
Updated: 1 Apr 2022, 3:34 PM |
Posted By: admin

ரமலான் மாதம் துவங்கவிருப்பதை முன்னிட்டு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புனித ரமலான் மாதத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டண பார்க்கிங் நேரத்தில் மாற்றம் செய்து புதிய அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

RTA வின் அறிவிப்பின்படி, வார நாட்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை துபாயில் உள்ள அனைத்து பார்க்கிங் இடங்களுக்கும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை வாகனங்களை நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று F குறியீடு கொண்ட Tecom Zone பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி கட்டண நேரமாக இருக்கும் என்றும், அடுக்குமாடி பார்க்கிங் இடங்கள் நாள் முழுவதும் கட்டண நேரமாக செயல்படும் என்றும் RTA கூறியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக துபாயில் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா இலவச பார்க்கிங் ஆனது, ஒரு சில தினங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.