ADVERTISEMENT

துபாய்: ரமலான் மாதத்தில் துபாய் மெட்ரோ, டிராம் செயல்படும் நேரங்களில் மாற்றம்.. புதிய நேரத்தை வெளியிட்ட RTA..!!

Published: 1 Apr 2022, 4:07 PM |
Updated: 1 Apr 2022, 9:15 PM |
Posted By: admin

அமீரகத்தில் நாளை முதல் புனித ரமலான் மாதம் தொடங்கவிருப்பதால் துபாயில் இயங்கக்கூடிய பொது போக்குவரத்து வசதிகளின் நேரங்களில் மாற்றம் செய்து புதிய நேரத்தை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஏப்ரல் 1) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

RTA வின் அறிவிப்பின்படி, துபாயில் உள்ள கட்டண பார்க்கிங் மண்டலங்கள், பொது பேருந்துகள், துபாய் மெட்ரோ மற்றும் டிராம், கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் மற்றும் சேவை வழங்குநர் மையங்கள் போன்றவை அனைத்தும் ரமலான் மாதம் முழுவதும் புதிய நேர அடிப்படையில் இயங்கும் என்றும் கூறப்பட்டுளளது. அதன்படி, துபாய் மெட்ரோ மற்றும் துபாய் டிராம் ஆகிய இரண்டும் இயங்கக்கூடிய புதிய நேர அட்டவணையையும் RTA வெளியிட்டுள்ளது.

துபாய் மெட்ரோ

>> துபாயில் பொது போக்குவரத்தில் அதிக வாடிக்கையாளர்களை கையாளும் துபாய் மெட்ரோவின் ரெட் லைன் வழித்தடமானது திங்கள் முதல் வியாழன் வரை காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும்.

ADVERTISEMENT

>> வார விடுமுறை நாட்களை பொறுத்தவரை, வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் இந்த வழித்தடத்தில் மெட்ரோ இயங்கும். சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும், மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் துபாய் மெட்ரோ போக்குவரத்து இயங்கும்.

>> துபாய் மெட்ரோவின் மற்றொரு வழித்தடமான கிரீன் லைன் வழித்தடத்தில் திங்கள் முதல் வியாழன் வரை காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை துபாய் மெட்ரோ பொதுமக்களுக்காக செயல்பாட்டில் இருக்கும்.

ADVERTISEMENT

>> வார விடுமுறை நாட்களை பொறுத்தவரை, வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் இந்த வழித்தடத்தில் மெட்ரோ இயங்கும். சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும், மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் துபாய் மெட்ரோ போக்குவரத்து இயங்கும்.

துபாய் டிராம்

>> திங்கள் முதல் சனிக்கிழமை வரை, துபாய் டிராம் காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.

மேலும் படிக்க: ரமலான் மாதத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டண நேரத்தை அறிவித்த RTA..!!