ADVERTISEMENT

தென்பட்டது ரமலான் பிறை.. நாளை முதல் ரமலான் மாதம் துவங்கும் என அறிவிப்பு வெளியிட்ட சவூதி..!!

Published: 1 Apr 2022, 7:32 PM |
Updated: 1 Apr 2022, 7:35 PM |
Posted By: admin

இந்த வருட ரமலான் மாதத்திற்கான பிறை பார்க்கப்பட்டதாக சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளதால், நாளை முதல் (ஏப்ரல் 2) ரமலான் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையொட்டி, ஏப்ரல் 1 (இன்று) ஷபான் மாத இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் ரமலான் மாதத்திற்கான நோன்பு வைக்கப்படும் என்றும், ரமலான் மாதம் முடிந்து துவங்கும் ஷவ்வால் மாதமானது பிறை பார்ப்பதைப் பொறுத்து தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் அடிப்படையிலேயே இந்த வருட நோன்பானது 29 நாட்கள் நீடிக்குமா அல்லது 30 நாட்கள் நீடிக்குமா என தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகமானது, சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால், அமீரகத்திலும் நாளை முதலே நோன்பு துவங்கும் என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT