ADVERTISEMENT

துபாயின் முக்கிய சாலைகளில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் என RTA அறிவிப்பு.. வாகன ஓட்டிகளுக்கு விளக்க வீடியோவும் வெளியீடு..!!

Published: 8 Apr 2022, 4:17 PM |
Updated: 8 Apr 2022, 8:20 PM |
Posted By: admin

துபாயில் நடைபெறவுள்ள நாத் அல் ஷிபா விளையாட்டு போட்டியின் சைக்கிள் பந்தயத்தை முன்னிட்டு, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பந்தயம் நடைபெறும் துபாயின் பிரதான சாலைகளில் மாற்றங்கள் செய்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில், இந்த சாலை போக்குவரத்து மாற்றங்கள் துபாயில் இன்றும் நாளையும் அமலில் இருக்கும் என்றும், வாகன ஓட்டிகள் பயன்பெற்றுக்கொள்ளும் விதமாக அது குறித்த விளக்க வீடியோவையும் RTA வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து RTA பதிவிட்டுள்ள ட்வீட்டில்: “ஏப்ரல் 8 ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் ஏப்ரல் 9 ம் தேதி சனிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் இரவு 9:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 12:30 மணி வரை நடைபெறவுள்ள நாத் அல் ஷிபா விளையாட்டு போட்டி 2022 வின் சைக்கிள் ஓட்டுதல் பந்தயத்தின் போது உங்கள் இலக்கை எளிதில் அடைய நீங்கள் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகளைச் சரிபார்க்கவும்” என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT