ADVERTISEMENT

இனி விசிட் விசாவில் வருபவர்களுக்கும் மெடிக்கல் இன்சுரன்ஸ் கட்டாயமா..?? பேச்சுவார்த்தை நடத்தும் குவைத்..!!

Published: 9 Apr 2022, 8:14 PM |
Updated: 9 Apr 2022, 8:32 PM |
Posted By: admin

வெளிநாடுகளில் இருந்து குவைத்திற்கு விசிட் விசாவில் வரும் நபர்கள் இனி கட்டாயம் மெடிக்கல் இன்சுரன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

யூனியன் ஆஃப் இன்சுரன்ஸ் கம்பெனிகளின் தலைவர் கலீத் அல் ஹசன் கூறுகையில் மெடிக்கல் இன்சுரன்ஸ் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து குவைத்திற்கு வந்து நாள் அல்லது மாத கணக்கில் தங்க விரும்பும் விசிட்டர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கேற்ப இன்சுரன்ஸ்களை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால் மெடிக்கல் இன்சுரன்ஸிற்காக ஏறக்குறைய 20 குவைத் தினார் செலவாகும் என கூறப்படுகிறது. தற்பொழுது வரை விசிட் விசாவில் வருபவர்களுக்கு இன்சுரன்ஸ் கட்டாயமில்லை. அதே நேரத்தில் ரெசிடென்ஸ் விசாவில் இருப்பவர்கள் இன்சுரன்ஸ் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT