ADVERTISEMENT

பாஸ்போர்ட்டில் ரெசிடென்ஸி ஸ்டிக்கர் இல்லாமல் அமீரக விசா பெற்ற முதல் இந்தியர்..!!

Published: 13 Apr 2022, 8:21 PM |
Updated: 13 Apr 2022, 8:26 PM |
Posted By: admin

பாஸ்போர்ட்டில் இருக்கும் அமீரக ரெசிடென்ஸி ஸ்டிக்கருக்கு பதிலாக அமீரகத்தில் வழங்கப்படும் அடையாள அட்டையான எமிரேட்ஸ் ஐடியே அதற்கு மாற்றாக செயல்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஒழுங்குமுறை மாற்றம் ஏப்ரல் 11, திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

இதன்படி ஒரு நபரின் ரெசிடென்ஸி விவரங்கள் கொண்ட ஸ்டிக்கர் இனி அவர்களின் பாஸ்போர்ட்டில் இருக்காது. அதற்குப் பதிலாக, அனைத்து விவரங்களும் எமிரேட்ஸ் ஐடியில் சேமிக்கப்படும்.

மேலும் இந்த மாற்றம் ரெசிடென்ஸி மற்றும் அடையாள அட்டை விண்ணப்பங்களைத் தனித்தனியாகச் செயலாக்குவதற்குப் பதிலாக அவற்றை ஒன்றிணைக்கிறது.

ADVERTISEMENT

அமீரகத்தில் வசிக்கும் சில வெளிநாட்டவர்கள் ஏற்கனவே இந்த புதிய சேவையைப் பெறத் தொடங்கியுள்ளனர். செவ்வாயன்று, ஒரு சில குடியிருப்பாளர்கள் இந்த சேவையில் பாஸ்போர்ட் பாதுகாப்பு மற்றும் விரைவான சேவைகள் உட்பட பல நன்மைகள் இருப்பதாக கூறியுள்ளனர்.

ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியரான உத்தேஷ் ஹெக்டே சமீபத்தில் புதிதாக வேறொரு வேலைக்கு மாறியுள்ளார். ஃபெடரல் இமிகிரேஷன் அதிகாரிகள் தனது விசாவைச் செயல்படுத்தியதை உறுதிப்படுத்தும் அறிவிப்பை உத்தேஷ் பெற்றிருந்தாலும், விசாவின் நகலைப் பெறுவது எப்படி என்று அவருக்குத் தெரியவில்லை. இருப்பினும் அவர் தனது எமிரேட்ஸ் ஐடியின் விர்ச்சுவல் நகலை செயலியில் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அவர் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது்பற்றி அவர் கூறுகையில், “ஏப்ரல் 14 அன்று நான் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக நேபாளத்திற்குச் செல்ல வேண்டும், மேலும் விசாவின் நகல் என்னிடம் இல்லாததால் நான் விமான நிலையத்தில் நிறுத்தப்படுவேன் என்று கவலைப்பட்டேன். பல ஆதாரங்களில் இருந்து தகவல்களைத் தேடிய பிறகு, நான் விமான நிலையத்திற்குச் செல்ல முடிவு செய்தேன் மற்றும் நான் பயணம் செய்ய தகுதியுடையவனா என்பதை இமிகிரேஷன் அதிகாரிகளிடம் சரிபார்க்க முடிவு செய்தேன்”.

“நான் பயணம் செய்வதில் எவ்வித தடங்கலும் இல்லை என்று இமிகிரேஷன் அதிகாரிகள் எனக்கு உறுதியளித்தனர் மற்றும் ரெசிடென்ஸி விசாவின் நகலை அணுக நான் பயன்படுத்தக்கூடிய பல்வேறு மொபைல் அப்ளிகேஷன்கள் பற்றிய விரிவான தகவலை எனக்கு அளித்தனர்.” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, “இதற்கான செயல்முறை மிகவும் வசதியானது மற்றும் எளிமையானது. எனது விசா முத்திரையைப் பெற எனது பாஸ்போர்ட்டை நான் கொடுக்க வேண்டியதில்லை. எமிரேட்ஸ் ஐடி மட்டுமே தேவை” எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர்களின் அதிகாரிகள், எமிரேட்ஸ் ஐடிகள் மற்றும் ரெசிடென்ஸி விசாக்களுக்கான விண்ணப்ப செயல்முறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

அல் நஹ்தா வணிக மையத்தின் பொது மேலாளர் ஷமிம் யூசுப் கூறுகையில், “எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்ஸி விசாக்களுக்கான டைப்பிங் செயல்முறை அப்படியே உள்ளது. இதில் முக்கிய மாற்றம் என்னவென்றால், பாஸ்போர்ட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படாது” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் விர்ச்சுவல் எமிரேட்ஸ் ஐடி சேவையைப் போலவே, வெளிநாட்டவர்கள் தங்கள் இ-விசாக்களை அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் அத்தாரிட்டிஸ் (ICP) செயலியில் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.