ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலம் விரைவில் ஆரம்பிக்கவிருப்பதை தொடர்ந்து சமீப நாட்களாக வெப்பநிலையானது அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதேபோல் இன்றும் அமீரகத்தில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, அல் குவாவில் (Al Quaa) வெப்பநிலை 42 ° C ஐத் தொடும் என்றும், அதே நேரத்தில் அபுதாபி மற்றும் துபாயில் முறையே 41 ° C மற்றும் 39 ° C ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் அபுதாபி இரண்டிலும் 20 முதல் 60 சதவீதம் வரை ஈரப்பதம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய இரண்டிலும் கடலின் நிலைமைகள் சில சமயங்களில் லேசானது முதல் சற்று மிதமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களாக அமீரகத்தில் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் வியாழன் அன்று, மதியம் 1.45 மணியளவில் அல் தஃப்ராவில் அதிகபட்சமாக 46.3°C வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.