ADVERTISEMENT

UAE ரமலான்: ஈத் அல் ஃபித்ருக்கு 5 நாட்கள் விடுமுறையை கொண்டாடவிருக்கும் அமீரகவாசிகள்..!!

Published: 17 Apr 2022, 6:25 PM |
Updated: 17 Apr 2022, 6:37 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் பாதி நாட்களை கடந்துள்ள நிலையில் ஈத் அல் ஃபித்ர் துவங்கும் நாளை எமிரேட்ஸ் வானியல் சங்கம் (EAS) கணித்துள்ளது. இதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள், ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு, ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் ஐந்து நாள் வார விடுமுறை நாட்களை பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இஸ்லாமிய நாட்காட்டியில் ஷவ்வாலின் முதல் நாளான ஈத் அல் பித்ரின் முதல் நாள் மே 2, 2022 திங்கட்கிழமை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று EAS வாரியத் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் கூறியுள்ளார்.

இதனையடுத்து 2022 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட நாட்காட்டியின்படி, ஈத் அல் ஃபித்ர் விடுமுறை ரமலான் 29 சனிக்கிழமை (ஏப்ரல் 30 2022) தொடங்கி, செவ்வாய், மே 3 அல்லது மே 4 புதன்கிழமை என ஷவ்வால் 3 உடன் முடிவடையும் என்றும் இந்த தேதி பிறை பார்ப்பதை பொறுத்து உறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரமலான் 30 நாட்களை நிறைவு செய்தால், ஈத் திங்கள்கிழமை, மே 2 (ஷவ்வால் 1) அன்று இருக்கும். அதன்படி ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் சனி (ஏப்ரல் 30), ஞாயிறு (மே 1), திங்கள் (மே 2), செவ்வாய் (மே 3) மற்றும் புதன்கிழமை (மே 4) உள்ளிட்ட ஐந்து நாள் வார விடுமுறை நாட்களை பெறுவார்கள்.

ஒருவேளை, ரமலான் 29 நாட்கள் மட்டுமே இருந்தால், ஈத் அல் ஃபித்ர் மே 1 (ஷவ்வால் 1) ஞாயிற்றுக்கிழமை வரும், எனவே ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் ஏப்ரல் 30 சனிக்கிழமை தொடங்கி மே 3 செவ்வாய் வரை 4 நாள் நீண்ட வார விடுமுறையை பெறுவார்கள்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு கூடி ஈத் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ தேதியை உறுதிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.