ADVERTISEMENT

அமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் சொந்த ஊர் செல்ல எக்ஸிட் பெர்மிட் பெறுவது எப்படி..??

Published: 18 Apr 2022, 7:03 AM |
Updated: 18 Apr 2022, 8:39 AM |
Posted By: admin

பொதுவாகவே நம்மில் பலர் கவனக்குறைவாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ முக்கிய ஆவணங்களை தொலைப்பது ஆங்காங்கே நடப்பதுதான். அதிலும் வெளிநாடுகளில் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டால் அவ்வளவுதான். இவ்வாறு அமீரகத்தில் பாஸ்போர்ட்டை தொலைத்த பின் ஊருக்கு செல்வது எப்படி என தெரியாமல் குழம்பி போய் இருப்பவர்களுக்காகவே இந்த பதிவு.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கொண்டு பாஸ்போர்ட்டை தொலைத்த பின்னர்  ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே பயணம் செய்ய வேண்டுமானால் அதற்கு வெளியேறும் அனுமதி (exit permit) பெற்று பயணம் செய்யலாம்.

ஏப்ரல் 12 அன்று, அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) அதிகாரப்பூர்வ சமூக சேனல்களில் அமீரகத்தில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.icp.gov.ae) வழியாக ஆன்லைனில் எக்ஸிட் பெர்மிட்டை எவ்வாறு பெறலாம் என்பதைத் தெரிவிக்கும் ஒரு பதிவை வெளியிட்டது.

ADVERTISEMENT

அதன்படி எக்ஸிட் பெர்மிட்டிற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் சேவைக்கான செலவு ஆகியவை குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எக்ஸிட் பெர்மிட்டை எவ்வாறு பெறுவது..??

விசாவானது துபாய் தவிர வேறு எமிரேட்டில் வழங்கப்பட்டிருந்தால், ICP யின் இணையதளம் அல்லது சேவை மையங்கள் வழியாக எக்ஸிட் பெர்மிட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இருப்பினும், உங்கள் விசா துபாயில் வழங்கப்பட்டிருந்தால், நீங்கள் வெளியேறும் அனுமதிக்கு ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ICP அல்லது GDRFA வழியாக எக்ஸிட் பெர்மிட்டை வழங்குவதற்கான விண்ணப்ப ஆவணங்கள் ஒரே மாதிரியானவையாக இருக்கும்.

முக்கியமான ஆவணங்கள்:

• தூதரகத்தில் இருந்து பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணம்

. • காவல் துறையிடம் இருந்து பாஸ்போர்ட் தொலைந்ததற்கான கடித அறிக்கை (lost letter report)

• பயண டிக்கெட்டின் நகல்.

• விண்ணப்பதாரரின் இரண்டு தனிப்பட்ட புகைப்படங்கள்.

கூடுதலாக, அந்த நபர் தூதரகத்திலிருந்து பயண ஆவணத்தைப் பெற வேண்டும். பயண ஆவணங்கள் அல்லது அவசரகால சான்றிதழ்கள் பொதுவாக பாஸ்போர்ட்டை இழந்த குடிமக்களுக்கு தூதரகங்களால் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டின் தூதரகமும் பயண ஆவணங்களை பதிவு செய்வதற்கு அதன் தனிப்பட்ட நடைமுறைகளைக் கொண்டுள்ளது. எனவே, எக்ஸிட் பெர்மிட்டிற்கு விண்ணப்பிக்கும் முன் தூதரகத்தின் செயல்முறைகளை சரிபார்க்க வேண்டும்.

ICP மூலம் ஆன்லைனில் எக்ஸிட் பெர்மிட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான படிகள்

1. சேவையை பெற https://icp.gov.ae/en/service/issue-exit-permit/ என்ற லிங்க் செல்லவும்

2. ‘Start service’ என்பதைக் கிளிக் செய்யவும்

3. விண்ணப்பப் படிவத்தில் பின்வரும் தகவல்களை நிரப்பவும்.

· முழு பெயர்

· மின்னஞ்சல் முகவரி

· தொலைபேசி எண்

· பிறந்த தேதி

4. அடுத்து, எக்ஸிட் பெர்மிட்டை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை இணைக்கவும் – உங்கள் பாஸ்போர்ட் தொலைந்திருந்தால்.

5. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, எக்ஸிட் பெர்மிட்டிற்கான கட்டணத்தை மின்னணு முறையில் டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.

6. விண்ணப்பத்தின் நிலையைப் பற்றி தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சலுக்கு SMS ஒன்று அனுப்பப்படும். எக்ஸிட் பெர்மிட்டிற்கான விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், செயல்முறை முடிந்தது என்று தெரிவிக்கும் புதுப்பிப்பைப் பெறலாம்.

செலவு:

• கோரிக்கை கட்டணம் (request fees): 100 திர்ஹம்

• வழங்கல் கட்டணம் (issuance fees): 100 திர்ஹம்

• மின்னணு சேவை கட்டணம் (electronic service fees): 50 திர்ஹம்

GDRFA மூலம் எக்ஸிட் பெர்மிட் பெறுவதற்கான விபரங்கள்

துபாயில் வசிப்பவராக இருந்தால், GDRFA -யிடம் இருந்து எக்ஸிட் பெர்மிட் பெற வேண்டும். ஆனால் இந்த செயல்முறைக்கு விண்ணப்பிக்க, GDRFA சேவை மையம் அல்லது Amer மையத்திற்குச் செல்ல வேண்டும்.

அவ்வாறு அமர் மையத்திற்குச் செல்லும்போது, ​​வெளியேறும் அனுமதியை வழங்குவதற்கான விண்ணப்பத்தைக் கோர வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, சேவை அதிகாரியிடம் தேவையான ஆவணங்களை இணைத்து, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

செலவு:

• சேவை கட்டணம் (service fees): 200 திர்ஹம்

• ஒரு பரிவர்த்தனைக்கு (transaction) 20 திர்ஹம் சேர்க்கப்படுகிறது

• கலெக்ஷன் கமிஷன்: நிறுவனங்களுக்கு 50 திர்ஹம், தனிநபர்களுக்கு 15 திர்ஹம்

• AMER மையங்கள் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால், 100 திர்ஹம் கட்டணம் கூடுதலாக சேர்க்கப்படும்.