ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று நிலவும் குறைந்த வெப்பநிலை..!! வானிலை மையம் தகவல்..!!

Published: 18 Apr 2022, 7:23 AM |
Updated: 18 Apr 2022, 9:48 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் திங்கள்கிழமை வானிலையானது மேகமூட்டமாகவும் தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என்றும், வெப்பநிலை சற்று குறைந்து காணப்படும் என்றும் தேசிய வானிலைத் துறை (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய வானிலை முன்னறிவிப்பில் அமீரகத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் இருக்கும் மற்றும் சில நேரங்களில் தூசி நிறைந்ததாகவும் வெப்பநிலை குறைந்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை ஈரப்பதத்துடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் பகல் நேரத்தில் மிதமான வேகத்துடன் வீசும் காற்று சில நேரங்களில் தூசி மற்றும் மணலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.