ADVERTISEMENT

அமீரகத்தில் புழக்கத்திற்கு வரும் புதிய 5 மற்றும் 10 திர்ஹம் நோட்டுகள்..!!

Published: 22 Apr 2022, 5:27 AM |
Updated: 22 Apr 2022, 10:58 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியானது இரண்டு புதிய 5 மற்றும் 10 திர்ஹம் நோட்டுகளை அமீரகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 5 திர்ஹம் மற்றும் 10 திர்ஹம் நோட்டுகள் பாலிமரால் செய்யப்பட்டவை மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளன.

ADVERTISEMENT

5 திர்ஹம் மற்றும் 10 திர்ஹம் நோட்டுகளின் மூன்றாவது பதிப்பான இது சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பாலிமர் பொருட்களைப் பயன்படுத்துகின்றன.

இந்த பொருள் பாரம்பரிய பருத்தி காகித திர்ஹம் நோட்டுகளை விட நீடித்தது மற்றும் புழக்கத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மடங்கு நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மறைந்த அமீரகத்தின் தந்தையான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் உருவப்படம் இந்த திர்ஹம் நோட்டுகளில் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறப்பு அச்சிடும் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒளிரும் வரைபடங்களை கொண்ட இதில் ஐக்கிய அரபு அமீரக பிராண்ட் லோகோவும் இடம்பெற்றுள்ளன.

இதே போன்று ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை ஒட்டி புதிய 50 திர்ஹம் நோட்டை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

5 திர்ஹம்

புதிய 5 திர்ஹம் நோட்டுக்கு தற்பொழுது இருக்கும் அதே வண்ணம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குழம்ப வேண்டிய அவசியமிருக்காது. மேலும் திர்ஹம் நோட்டின் முன்பகுதியில் அஜ்மான் கோட்டையின் சித்தரிப்பு உள்ளது. பின்புறத்தில் ராசல் கைமாவில் உள்ள தயா கோட்டையின் படம் உள்ளது.

10 திர்ஹம்

10 திர்ஹமும் அதன் வழக்கமான பச்சை நிறத்தைக் கொண்டுள்ளது. இதன் மையத்தில் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதியின் படம் உள்ளது. பின்புறத்தில் ஷார்ஜாவின் குறிப்பிடத்தக்க கலாச்சார அடையாளமான கொர்ஃபக்கன் ஆம்பிதியேட்டரின் சித்தரிப்பு உள்ளது.

புதிய திர்ஹம் நோட்டுகள் எப்போது கிடைக்கும்?

10 திர்ஹம் நோட்டு வியாழக்கிழமை (நேற்று) முதலும், 5 திர்ஹம் ஏப்ரல் 26 செவ்வாய்கிழமை முதலும் புழக்கத்திற்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது புழக்கத்தில் இருக்கும் திர்ஹம் நோட்டுகளின் பதிப்புகள் புதிய பாலிமர் பதிப்புகளுடன் தொடர்ந்து பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.