ADVERTISEMENT

UAE: தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அரசு..!!

Published: 22 Apr 2022, 3:13 AM |
Updated: 22 Apr 2022, 7:22 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பின்படி ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஐக்கிய அரபு அமீரக அரசு ஊழியர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை அரசு மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் தொடங்கும் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு கூடி அதிகாரப்பூர்வ தேதியை உறுதிப்படுத்தும்.  வானியல் கணக்கீடுகளின்படி, அமீரகத்தில் இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் மே 2 அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.