ADVERTISEMENT

UAE: 10,000 திர்ஹம் மதிப்புள்ள விமான டிக்கெட்டுகள் வெல்லும் வாய்ப்பு..!! எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்..!! பிக் டிக்கெட்டின் புதிய ப்ரொமோஷன்.!!

Published: 22 Apr 2022, 8:34 PM |
Updated: 22 Apr 2022, 8:46 PM |
Posted By: admin

அபுதாபியில் மிகப்பெரிய ரேஃபிள் டிரா நடத்தும் பிக் டிக்கெட் குழுவானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த இடத்துக்கும் பயணிக்கவும், வரவிருக்கும் விடுமுறை காலத்தை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடவும் வாய்ப்பளிக்கும் வகையில் அதன் முதல் ‘Holiday giveaway’ ப்ரொமோஷனை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த ப்ரொமோஷனின் கீழ் ஏப்ரல் 30 வரை, ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சலுகையில் 1,000 திர்ஹம் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு டிராவில் நுழைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் தேர்ந்தெடுக்கப்படும் 10 வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் உலகின் எந்த இடத்திற்கும் பயணிக்க 10,000 திர்ஹம் மதிப்புள்ள விமான டிக்கெட்டுகளை வெல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் வெற்றி பெறும் அதிர்ஷ்ட வெற்றியாளர்களின் பெயர்கள் பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் மே 1 அன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை வாங்கும் போது அவர்கள் வழங்கிய தொலைபேசி எண் அல்லது ஈமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளப்படுவார்கள். பின் வெற்றியாளர்கள் பிக் டிக்கெட் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பிக் டிக்கெட்டுடன் உலகம் சுற்றும் நேரம் இது” என்று தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அத்துடன் “இந்த ஏப்ரலில் பிக் டிக்கெட் மூலம் பெரிய அளவில் வெற்றி பெற வாடிக்கையாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம்” என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், அதே டிக்கெட்டுகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மே 3 அன்று நடைபெறும் நேரடி டிராவின் போது 12 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசையும் மற்ற மூன்று ரொக்கப் பரிசுகளையும் வெல்வதற்கான வாய்ப்பையும், மேலும் வாராந்திர பரிசாக 300,000 திர்ஹம் வெல்லும் வாய்ப்பையும் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட்டுகளை ஏப்ரல் 30 இரவு 11.59 மணி வரை வாங்கலாம் என்றும் குடியிருப்பாளர்கள் இந்த டிக்கெட்டுகளை அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளமான www.bigticket.ae மூலம் பிக் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.