ஐக்கிய அரபு அமீரகத்தில் வார இறுதி நாளான இன்று வானிலையானது வெப்பமானதாகவும் மற்றும் ஈரப்பதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய வானிலை மையம் (NCM) இன்று வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கிழக்கு நோக்கி மலைகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அபுதாபி மற்றும் துபாயில் முறையே 39°C மற்றும் 38°C வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் லேசானது முதல் மிதமான வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் அமீரகத்தைப் பொறுத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலையாக 42°C பதிவாகும் மற்றும் குறைந்த வெப்பநிலையாக 17°C பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.