ADVERTISEMENT

துபாய், ஷார்ஜாவை தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறையை அறிவித்த இரண்டு எமிரேட்..!!

Published: 24 Apr 2022, 3:21 PM |
Updated: 24 Apr 2022, 3:28 PM |
Posted By: admin

அமீரக அரசானது வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 8 வரை என 9 நாட்கள் விடுமுறையை சமீபத்தில் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய இரு எமிரேட்டுகளும் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை காலத்தை 9 நாட்களாக நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி ஷார்ஜா மற்றும் துபாயில் ஏப்ரல் 30 சனிக்கிழமை முதல் மே 8 ஞாயிற்றுக்கிழமை வரை ஈத் அல் விடுமுறை இருக்கும் என்றும் இதன் மூலம் அரசு ஊழியர்கள் ஒன்பது நாட்கள் விடுமுறை பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இரு எமிரேட்டுகளும் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் விடுமுறையை உறுதி செய்யும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும் மே 9 ம் தேதி திங்கள்கிழமை முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் அமீரகத்தின் தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அவர்களுக்கு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை என 4 அல்லது 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.