ADVERTISEMENT

UAE: ஷாப்பிங் பண்ணுங்க.. வின் பண்ணுங்க.. 1 மில்லியன் திர்ஹம் மெகா பரிசு.. 25,000 திர்ஹம் வாராந்திர பரிசு.. டிராவில் பங்கேற்பது எப்படி..??

Published: 25 Apr 2022, 9:13 AM |
Updated: 25 Apr 2022, 9:30 AM |
Posted By: admin

அபுதாபியை தளமாகக் கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனமான லூலூ குரூப் இன்டர்நேஷனல் நிறுவனம் ‘மால் மில்லியனர்’ எனும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதில் ஷாப்பிங் செய்பவர்கள் 1 மில்லியன் திர்ஹம்ஸ் மெகா பரிசை வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏப்ரல் 23 முதல் ஆகஸ்ட் 6, 2022 வரை நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கும் அபுதாபி மற்றும் அல் அய்னில் இருக்கும் ஒன்பது மால்களில் 200 திர்ஹம் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் பரிசுகளை வெல்வதற்கான ரேஃபிள் டிராவில் நுழையத் தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடத்தப்படும் ‘மால் மில்லியனர்’ சீசன் 2, லூலூ குரூப் இன்டர்நேஷனலின் ஷாப்பிங் மால் மேம்பாடு மற்றும் நிர்வாகப் பிரிவான லைன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ப்ராப்பர்ட்டியின் கருத்தாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மெகா பரிசான 1 மில்லியன் திர்ஹம் பரிசுகளை தவிர்த்து, 14 வாராந்திர டிராக்களில் 25,000 என மொத்தமாக 350,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும், பிரச்சாரத்தின் இறுதி வாரத்தில், மால்களில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் 150,000 மதிப்புள்ள மற்ற பரிசுகள் மற்றும் பரிசுக் கூப்பன்கள் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 1 மில்லியன் திர்ஹம்களுக்கான மிகப்பெரிய டிரா ஆகஸ்ட் 10 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (DCT- அபுதாபி) ரீடெயில் ப்ளாட்ஃபார்ம், ரீடெயில் அபுதாபியுடன் இணைந்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து கூறுகையில், “முதல் சீசனுடன் ஒப்பிடும்போது இது மிகப் பெரிய மற்றும் சிறந்த சீசனாகும். அதிகாரிகள் நிர்ணயித்த அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றும் அதே வேளையில், தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதாரம் மற்றும் சமூக செயல்பாடுகளை மீட்டெடுப்பதை ஆதரிப்பதே இந்த ஆண்டு எங்களின் குறிக்கோள், ”என்று லைன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் பிராப்பர்ட்டியின் இயக்குனர் வஜேப் கௌரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அல் வஹ்தா மாலின் பொது மேலாளர் நவநீத் சுதாகரன் தெரிவிக்கையில்ஒ, “பிரச்சாரத்தின் போது மால்களில் 200 திர்ஹம் செலவழிக்கும் நபர்கள் தங்கள் பில்களை நியமிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை கவுண்டர்களில் (customer service counters) சமர்ப்பிக்கலாம் மற்றும் அவர்களின் ரிஜிஸ்ட்ரேஷனானது அவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஈமெயில் மற்றும் SMS மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். வெற்றியாளர்களுக்கு அவர்களின் கூப்பன்களில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள்/மின்னஞ்சல்கள் மூலம் அறிவிக்கப்படும்” என கூறியுள்ளார்.

இந்த ப்ரொமோஷனானது, ஹைப்பர் மார்க்கெட்கள் உட்பட ஒன்பது மாலின் அவுட்லெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பது மால்கள்:

  • அல் வஹ்தா மால்
  • முஷ்ரிஃப் மால்
  • கலிதியா மால்
  • அல் ரஹா மால்
  • மஸ்யாத் மால்
  • மதீனத் சயீத் ஷாப்பிங் சென்டர்
  • ஃபோர்சன் சென்ட்ரல் மால் (forsan central mall)
  • பராரி அவுட்லெட் மால் (Barari outlet mall)
  • அல் ஃபோஹ் மால் (Al Foah Mall )