ADVERTISEMENT

UAE: சிறைவாசம் முடிந்து நாடு திரும்பும் கைதிகளின் பயண டிக்கெட்டிற்கு உதவும் எமிராட்டி..!! 1 இலட்சம் திர்ஹம்ஸ் நன்கொடை..!!

Published: 26 Apr 2022, 10:17 AM |
Updated: 26 Apr 2022, 10:19 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அஜ்மான் தண்டனை மற்றும் சீர்திருத்த நிறுவனங்களில் சிறைத்தண்டனையை முடித்த கைதிகளின் விமான டிக்கெட்டுகளுக்காக ஒரு எமிராட்டி 100,000 திர்ஹம்ஸ் பணத்தை நன்கொடையாக திங்கள்கிழமை வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

அஜ்மான் காவல்துறையின் துணைத் தலைமைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் காலித் முகமது அல் நுவைமி, சிறைதண்டனை முடிந்த கைதிகள் தங்களின் புதிய வாழ்க்கையை தொடங்க சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு, யூசுப் சுல்தான் அல் அஜ்மானி என்ற அமீரக நாட்டவரிடம் இருந்து 100,000 திர்ஹம் மதிப்புள்ள காசோலையைப் பெற்றார்.

காசோலையைப் பெற்ற பிரிகேடியர் அல் நுவைமி அல்-அஜ்மானியின் இந்த மனிதாபிமான முன்முயற்சிக்கும் அஜ்மான் காவல்துறையின் ஒத்துழைப்புடன் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இது கைதிகள் தங்கள் நாட்டிற்குத் திரும்புவதற்கு பெரிதும் உதவும் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் “இந்த பங்களிப்பு சமூக ஒற்றுமை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நன்மையான காரியங்கள் புரிவதற்கான மற்றும் கொடுத்து உதவுவதற்கான பாதையின் மிக உயர்ந்த பிணைப்புகளை பிரதிபலிக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து யூசுப் சுல்தான் அல்-அஜ்மானி, அஜ்மான் காவல்துறையிடம் எமிரேட்டின் பாதுகாப்புப் பங்களிப்புகளுக்காகவும், கைதிகளின் சேவையை மேம்படுத்துவதற்கான இடைவிடாத முயற்சிகளுக்காகவும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT