ADVERTISEMENT

துபாய் மாலுக்கு அருகில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட மாபெரும் தீவிபத்து..!!

Published: 27 Apr 2022, 6:06 PM |
Updated: 27 Apr 2022, 6:09 PM |
Posted By: admin

துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால், துபாய் டவுன்டவுன் பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.

ADVERTISEMENT

இன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு துபாய் மாலுக்கு அருகில் உள்ள ஸ்விஸ்ஸோட்டல் அல் முரூஜ் (Swissotel Al Murooj,) ஹோட்டலின் மேற்கூரையில் ஏற்பட்ட தீவிபத்தால் அங்கு பரவிய புகை மற்றும் தீ எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவப்பட்டு வருகின்றன.

அங்கு தீவிபத்து ஏற்பட்ட உடனேயே ஹோட்டலில் இருந்த அனைவரும் கட்டிடத்தில் இருந்து விரைவாக வெளியேற்றப்பட்டதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அத்துடன் தீவிபத்து குறித்து அறிந்த சிவில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஹோட்டல் முன்பு உள்ளூர் ஹோட்டல் பிராண்டான ரோடா (Roda) மற்றும் அதற்கு முன்பு ரோட்டானாவால் (Rotana) இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT