ADVERTISEMENT

துபாய் டாக்ஸிகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய முயற்சி..!!! RTA தகவல்..!!!

Published: 8 Apr 2020, 5:48 AM |
Updated: 8 Apr 2020, 5:48 AM |
Posted By: jesmi

துபாய்ன் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (Roads and Transport Authority-RTA) துணை நிறுவனமான துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (Dubai Taxi Corporation), கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அதன் டாக்ஸிகளில் டாக்ஸி ஓட்டுனருக்கும் பயணிகளுக்கும் இடையே இருவரின் பாதுகாப்பையும் கருதி ஒரு தடுப்பை ஏற்படுத்தும் முயற்சியாக தனிமைப்படுத்திகளை (isolators) நிறுவியுள்ளது.

ADVERTISEMENT

இந்த தனிமைப்படுத்திகளை (isolators) நிறுவுவதன் மூலம், டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் ஒரு முழுமையான பிரிவை உறுதி செய்ய முடியும். மேலும், பயணங்களின் போது ஓட்டுனர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே தொற்று பரவுவதில் இருந்து அதிக பாதுகாப்பையும் வழங்க முடியும். இந்த தனிமைப்படுத்திகள் ஏற்கனவே பல டாக்சிகளில் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள துபாய் டாக்ஸிகளிலும் அவற்றை நிறுவும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமூக உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய RTA மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

மேலும், துபாய் டாக்சிகள் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகும் தினசரி சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன மற்றும் பயணிகளுக்கு தேவையான ஹாண்ட் சானிடைசர் (Hand Sanitiser) அனைத்து டாக்ஸிகளிலும் நிலையாக வைக்கப்பட்டிருக்கும். அனைத்து டாக்ஸி ஓட்டுநர்களும் முக கவசங்கள் (facemask) மற்றும் கையுறைகளை (gloves) அணிவது உள்ளிட்ட தடுப்பு நடைமுறைகளை முழுமையாக கடைபிடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட உத்தரவுகளுக்கு ஏற்ப, டாக்ஸி கதவுகளைத் திறப்பது மற்றும் மூடுவது போன்றவற்றின் மூலமாக ஏற்படும் வெவ்வேறு பயணிகளின் தொடர்பை தடுக்கும் பொருட்டும் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் ஓட்டுனர்கள் டாக்ஸிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறார்கள் என்று RTA தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT