ஷார்ஜாவில் உள்ள கட்டண வாகன நிறுத்துமிடங்கள் ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் முதல் மே 5, 2022 வரை பயன்படுத்த இலவசம் என்று ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.
ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மே 1 முதலும் இல்லையெனில் மே 2 முதலும் பார்க்கிங் இலவசம் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, வானியல் கணக்கீடுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் மே 2 அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் 7 நாள் பார்க்கிங் மண்டலங்களுக்கு (7 day parking zones) இந்த இலவச பார்க்கிங் பொருந்தாது என்று முனசிபலிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை நீல நிற பார்க்கிங் அடையாளங்களால் கண்டறியலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.