ADVERTISEMENT

அமீரகத்தில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு..!! வானிலை மையம் தகவல்..!!

Published: 29 Apr 2022, 9:37 AM |
Updated: 29 Apr 2022, 12:10 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் விடுமுறை ஆரம்பிக்கவுள்ள நிலையில் குடியிருப்பாளர்கள் வார இறுதியில் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதனையொட்டி மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் வரும் நாட்களில் பரவலான மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமீரகத்தில் கடந்த ஒரு சில நாட்களாகவே வெப்பநிலை குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. புதன்கிழமை, பல எமிரேட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை மற்றும் மிதமான மழை பெய்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். அதே போல், அல் அய்ன் மற்றும் ஃபுஜைராவில் சில பகுதிகளில் கனமழை பெய்ததாகவும் கூறப்பட்டது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து நேற்று, வியாழக்கிழமையின் போது அமீரகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதே போன்று மே 1, ஞாயிற்றுக்கிழமை வரை அமீரகத்தின் பரவலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், சீரற்ற மேகமூட்டமான சூழலும் நிலவும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வானிலை ஒரே மாதிரியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கடலின் வேகம் மிதமானதாக இருக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடல் கொந்தளிப்பாகவும் இருக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.