ADVERTISEMENT

UAE: இலவச பார்க்கிங்… டோல் கேட் கட்டணமும் இல்லை.. அறிவிப்பை வெளியிட்ட அபுதாபி..!!

Published: 29 Apr 2022, 8:33 PM |
Updated: 29 Apr 2022, 8:34 PM |
Posted By: admin

ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை முன்னிட்டு
அபுதாபியில் உள்ள வாகன ஓட்டிகள் எட்டு நாட்கள் வரை இலவச பார்க்கிங்கைப் பெறலாம் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் பொது பார்க்கிங் இடங்கள் மற்றும் டார்ப் டோல் கேட் அமைப்பு ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை முதல் மே 7 சனிக்கிழமை காலை 7:59 மணி வரை இலவசம் என கூறப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) கூறுகையில், “MAWAQiF பார்க்கிங் கட்டணம் ஏப்ரல் 29 வெள்ளி முதல் மே 7 சனிக்கிழமை காலை 7:59 மணி வரை இலவசம். கூடுதலாக, ஈத் விடுமுறையின் போது முசாஃபா M-18 டிரக் பார்க்கிங் லாட்டில் பார்க்கிங் கட்டணமும் இலவசம்” என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதையும், போக்குவரத்தை தடை செய்வதையும் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை ITC கேட்டுக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து “வாகனம் நிறுத்துவதற்கென குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்களை சரியாக நிறுத்துங்கள் மற்றும் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை குடியிருப்பு பகுதிகளில் பார்க்கிங் (resident parking) செய்வதைத் தவிர்க்கவும்” என்று ITC குறிப்பிட்டது.

ADVERTISEMENT

“ஏப்ரல் 29, வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை நாட்களில் டார்ப் டோல் அமைப்பு இலவசமாக இருக்கும், மேலும் மே 7 சனிக்கிழமையன்று, பீக் நேரங்கள் என சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமான நேரங்களில் (சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை) சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்காக சாதாரண கட்டண முறை மீண்டும் செயல்படுத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஈத் விடுமுறை நாட்களில், அபுதாபியில் பொது பேருந்து சேவைகள் வழக்கமான அட்டவணையின்படி செயல்படும் என்றும், ஆனால் ஏப்ரல் 30 முதல் மே 4 வரையிலான நாட்களில் தேவையின் அளவிற்கு ஏற்ப பிராந்திய பேருந்து சேவைகளின் (regional bus service) எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அபுதாபி முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மையங்கள் ஏப்ரல் 30 முதல் மூடப்பட்டு மே 9 ஆம் தேதி மீண்டும் தொடங்கும். ITC இன் சேவைகள் மற்றும் பேருந்துகளின் நேரம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, www.itc.gov.ae ஐ பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் சேவை ஆதரவு மையத்தை 800850 என்ற கட்டணமில்லா எண்ணில் அல்லது Darbi ஸ்மார்ட் ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.