ADVERTISEMENT

ஒரு வாரத்திற்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த அஜ்மான்..!! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

Published: 30 Apr 2022, 6:03 AM |
Updated: 30 Apr 2022, 8:31 AM |
Posted By: admin

அஜ்மானில் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 30 முதல் மே 6 வரை வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து  மே 7 சனிக்கிழமை முதல் பார்க்கிங் கட்டணம் மீண்டும் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதே போன்று மற்ற எமிரேட்டுகளான துபாய், ஷார்ஜா, அபுதாபி எமிரேட்டுகளும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ளன.

அஜ்மானில் வெளியிட்ட அறிவிப்பின்படி வாகன ஓட்டிகள் இன்று முதல் 7 நாட்களுக்கு இலவசமாக தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு, வானியல் கணக்கீடுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் பித்ர் மே 2 அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்று ஏப்ரல் 30, 2022 (ரமலான் 29) மாலை ஷவ்வால் மாதத்தின் பிறையைப் பார்க்க ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு அழைப்பு விடுத்துள்ளது.

பிறையைப் பார்க்கும் எவரும் 026921166 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சாட்சியத்தைப் பதிவு செய்ய அருகிலுள்ள நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும் குழு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT