ADVERTISEMENT

ஏப்ரல் 10 முதல் மஸ்கட்டில் இரு வாரங்களுக்கு லாக்டவுன் அறிவித்தது ஓமான் அரசு…!!!

Published: 8 Apr 2020, 2:15 PM |
Updated: 8 Apr 2020, 2:20 PM |
Posted By: jesmi

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அந்நாட்டின் தலைநகரமான மஸ்கட் (Muscat) நகரம் முழுவதும் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு நகரத்திற்கு உள்நுழையவும் வெளிசெல்லவும் 12 நாட்கள் தடை விதிக்கப்படும் (Lockdown) என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து ஓமனில் அதிகரித்து வருவதே இந்த நடவடிக்கை எடுக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன்படி மஸ்கட் நகரமானது வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் அடுத்த 12 நாட்களுக்கு அந்த நகரத்தில் இருந்து மற்ற நகரங்களுக்கு வெளியே செல்லவும், மற்ற பகுதிகளில் இருந்து நகரத்திற்கு உள்ளே செல்லவும் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஓமனில் இதுவரை 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு நபர்கள் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT