ADVERTISEMENT

அமீரக அதிபர் மறைவிற்கு அபுதாபி இந்து கோவிலில் சிறப்பு பிரார்த்தனை..!!

Published: 14 May 2022, 6:17 PM |
Updated: 14 May 2022, 6:19 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக தலைவரும், அபுதாபியின் ஆட்சியாளருமாக இருந்த மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அபுதாபியில் உள்ள BAPS இந்து கோயிலில் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

அதில் “மிகுந்த துக்கமான இந்த தருணத்தில், எங்கள் அன்புக்குரிய ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு அரச குடும்பம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலக மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா தெரிவித்துள்ளார்.

மேலும் “அவரது தலைமை இந்த தேசத்தை அமைதி மற்றும் செழுமையின் வீடாகவும், நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாகவும் மாற்றத் தூண்டியது” என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT