ADVERTISEMENT

வாகன ஓட்டிகளுக்கு மூன்று நாள் இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்..!!

Published: 15 May 2022, 9:23 AM |
Updated: 15 May 2022, 9:24 AM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, துபாயில் பொது பார்க்கிங் கட்டணம் மூன்று நாட்களுக்கு இலவசமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துபாய் வாகன ஓட்டிகள் மே 16 திங்கள் வரை வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணம் மே 17 செவ்வாய்கிழமை முதல் மீண்டும் செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மறைந்த மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமைச்சகங்கள், கூட்டாட்சி மற்றும் உள்ளூர் துறைகள் மற்றும் தனியார் துறையின் பணி இடைநிறுத்தத்துடன் ஒத்துப்போகிறது.

இதே போல் மற்றொரு எமிரேட்டான ஷார்ஜாவிலும் மூன்று நாட்கள் பார்க்கிங் இலவசம் என்று முன்னதாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் மறைந்த அமீரக அதிபருக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT