ADVERTISEMENT

துபாய் விமான நிலைய ஓடுபாதை மூடல்: இலவச பேருந்து சேவை, டாக்ஸி மற்றும் உபெர் கார்களுக்கு தள்ளுபடி..!!

Published: 26 May 2022, 12:10 PM |
Updated: 26 May 2022, 12:36 PM |
Posted By: admin

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) வடக்கு ஓடுபாதை மூடப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இதன் விளைவாக துபாய் வேர்ல்ட் சென்ட்ரலுக்கு (DWC) பல விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக விமான நிலையங்களின் ஆபரேட்டர் இரண்டு விமான நிலையங்களுக்கிடையில் பல போக்குவரத்து சேவைகளை அனைத்து பயணிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி பல்வேறு பயணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் போக்குவரத்து சலுகைகளின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

>> சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு, DWC 2,500 கார்கள் வரை இலவசமாக பார்க்கிங் செய்வதற்கான வசதியைக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

>> துபாய் ஏர்போர்ட்ஸானது DXB மற்றும் DWC இன் அனைத்து டெர்மினல்களுக்கும் இடையே இலவச பேருந்து சேவையை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும், 24 மணிநேரமும் வழங்குகிறது. இது பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை அனுபவத்தை உறுதி செய்கிறது.

>> துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் விமான நிலைய வாடிக்கையாளர்களுக்கு DWC இலிருந்து தொடங்கும் எந்தவொரு பயணத்திற்கும் குறைந்த பட்ச கட்டணங்களை நீக்கும் என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

>> உபெர் (uber) கார் சேவைகள் மூலம் பயணம் செய்பவர்கள், அப்ளிகேஷன் மூலம் காரை முன்பதிவு செய்யும் போது, ​​‘DWC2022’ஐ மேற்கோள் காட்டி தள்ளுபடிகளை அனுபவிக்க முடியும்.

>> செலவு குறைந்த வகையில் பயணிகளுக்கு போக்குவரத்து விருப்பத்தை வழங்கும் வகையில்,DWC இலிருந்து N55 மற்றும் F55 ஆகிய பேருந்து வழித்தடங்களை RTA தொடர்ந்து இயக்கும்.

மேலும் மே 9 முதல் ஜூன் 22 வரை 45 நாட்கள் மூடப்படும் காலம் முழுவதும், துபாய் விமான நிலையங்கள் அனைத்து பயணிகளும் தங்கள் புறப்படும் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமானத் தகவல்களை கவனமாகச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.