ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ஷேக் நஹ்யானை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்.. வைரலாகும் புகைப்படம்..!

Published: 25 Jun 2022, 9:33 PM |
Updated: 25 Jun 2022, 9:33 PM |
Posted By: admin

கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பைபெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், வசூலில் ரூ.400 கோடியை நெருங்கியுள்ளது.

ADVERTISEMENT

கமல் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘விக்ரம்’ படம் பெற்றுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரான ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை அவரது மாளிகையில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கமல்ஹாசன், சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய ஊடகங்கள் குறித்தும், அடுத்த தலைமுறை அதை எப்படி கையாள்வது என்பதைப் பற்றிய சில விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வராலிகியுள்ளது.

ADVERTISEMENT