ADVERTISEMENT

UAE: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. மூன்று வாரங்களுக்கு மூடப்பட்டுள்ள ஷார்ஜாவின் பிரதான சாலைகள்..!

Published: 23 Jul 2022, 7:56 AM |
Updated: 23 Jul 2022, 7:56 AM |
Posted By: admin

ஷார்ஜாவில் ஷேக் சுல்தான் பின் சக்ர் அல் காசிமி தெரு, ஷேக் அப்துல் கரீம் அல் பக்ரி square முதல் ரஷீத் பின் முஹம்மது பின் காதிம் square வரை உள்ள சாலைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவதுவதால் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 10 வரை மூன்று வாரங்களுக்கு சாலைகள் மூடப்படுவதாக ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து SRTA டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ஷார்ஜாவின் சாலைகளின் மேம்பாட்டையும், செயல்திறனையும் அதிகரிக்க ஷேக் சுல்தான் பின் சகர் அல் காசிமி தெரு ஷேக் அப்துல் கரீம் அல் பக்ரி square-இல் இருந்து ரஷித் பின் முஹம்மது பின் சாலை வரை மூடப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழிகளில் செல்லுமாறு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.