ADVERTISEMENT

UAE: வானக ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. துபாயில் இன்று இலவச பார்க்கிங் வசதி..!

Published: 30 Jul 2022, 9:47 AM |
Updated: 30 Jul 2022, 9:47 AM |
Posted By: admin

ஹிஜ்ரி புத்தாண்டான இன்று அமீரகத்தில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ​​துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இலவச வாகன பார்க்கிங் வசதியை அறிவித்துள்ளது. மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினல்கள் தவிர அனைத்து பார்க்கிங் பகுதிகளும் முஹர்ரம் 1 ஆன இன்று இலவசமாக வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் ஜூலை 30 சனிக்கிழமை அதிகாரப்பூர்வ ஊதிய விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வானியல் மையம் வெள்ளிக்கிழமை முஹர்ரம் மாதத்தின் பிறையின் புகைப்படத்தையிம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.