ADVERTISEMENT

இந்தியா – அமீரகம் இடையே புதிய விமான சேவைகளை அறிவித்த இண்டிகோ நிறுவனம்..!

Published: 15 Aug 2022, 6:59 PM |
Updated: 15 Aug 2022, 6:59 PM |
Posted By: admin

இந்திய விமான நிறுவனமான இண்டிகோ செப்டம்பர் 22 முதல் மும்பை மற்றும் ராஸ் அல் கைமா இடையே புதிய நேரடி விமான சேவைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது ராஸ் அல் கைமாவை அதன் 6E நெட்வொர்க்கில் கேரியரின் 100வது இடமாக்கும். இண்டிகோவின் தலைமை அதிகாரிகளில் ஒருவர், நான்காவது எமிரேட்சில் நிறுவனம் நுழைவதற்கான அறிவிப்பை வெளியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ராஸ் அல் கைமா நிறுவனத்தின் 26 ஆவது சர்வதேச டெஸ்டினேஷனாகவும் ஒட்டுமொத்த டெஸ்டினேஷன்களில் 100 ஆவதாகவும் இருக்கும் என அவர் கூறினார்.

ADVERTISEMENT

அதிக அளவிலான பயணிகள் ராஸ் அல் கைமாவிற்கு பயணம் செய்கிறார்கள். குறிப்பாக, 2021 ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாவது பெரிய சர்வதேச மூல சந்தையாக இருந்தது. இந்த ஆண்டு கோவிட் தொற்றுக்கு முந்தைய நிலைகளுக்கு விமான போக்குவரத்து இருக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இண்டிகோவின் தலைமை அதிகாரிகளில் ஒருவர், நான்காவது எமிரேட்சில் நிறுவனம் நுழைவதற்கான அறிவிப்பை வெளியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ராஸ் அல் கைமா நிறுவனத்தின் 26 ஆவது சர்வதேச டெஸ்டினேஷனாகவும் ஒட்டுமொத்த டெஸ்டினேஷன்களில் 100 ஆவதாகவும் இருக்கும் என அவர் கூறினார்.

ADVERTISEMENT

அதிக அளவிலான பயணிகள் ராஸ் அல் கைமாவிற்கு பயணம் செய்கிறார்கள். குறிப்பாக, 2021 ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாவது பெரிய சர்வதேச மூல சந்தையாக இருந்தது. இந்த ஆண்டு கோவிட் தொற்றுக்கு முந்தைய நிலைகளுக்கு விமான போக்குவரத்து இருக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ராஸ் அல் கைமா மற்றும் ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்தின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் சார்பில், “இண்டிகோ விமான நிறுவனத்துடனான ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்தின் கூட்டாண்மை, தொற்றுநோய்க்கு பிறகு பழைய நிலைக்குத் திரும்புவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். ராஸ் அல் கைமாவின் வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலா மற்றும் தொழில்துறை இந்த இணைப்பின் மூலம் பயனடையும் மற்றும் விமான நிலையத்திற்கான எங்களின் தற்போதைய விரிவாக்க உத்தியில் இந்த கூட்டாண்மை ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டவுடன் இந்திய துணைக் கண்டத்திலிருந்து ஏராளமான வாய்ப்புகள் வரும் என நிறுவனம் நம்புகிறது. ஏனெனில் மும்பை ஒரு முக்கிய விமான மையமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், இண்டிகோ சேவை உள்ள இந்திய நகரங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் பல்வேறு பயணிகள் இணைக்கப்படுவார்கள் என நிறுவனம் நம்புகிறது.