ADVERTISEMENT

UAE: வெளிநாட்டினருக்கான உலகின் வளர்ந்து வரும் 6 நகரங்களில் இடம்பெற்றுள்ள துபாய்..!

Published: 18 Aug 2022, 1:50 PM |
Updated: 18 Aug 2022, 1:50 PM |
Posted By: admin

வெளிநாட்டினருக்கான உலகின் சிறந்த வளர்ந்து வரும் 6 நகரங்களில் துபாய் இடம்பெற்றுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக ஆயிரக்கணக்கான ஸ்டார்ட்-அப் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாக துபாய் மாறியிருப்பது வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிக ஊதியம் பெறும் வேலைகள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறைகளால் துபாய் உலகளாவிய நகரமாக திகழ்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் கோலாலம்பூர், லிஸ்பன், பெங்களூர், மெக்சிகோ சிட்டி மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.