ADVERTISEMENT

அமீரகத்தில் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த இளைஞர் மீது மோதிய கார்.. வாகன ஓட்டி கைது..!

Published: 19 Aug 2022, 5:36 PM |
Updated: 19 Aug 2022, 5:36 PM |
Posted By: admin

அமீரகத்தில் உள்ள வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிய நாட்டவர் மீது வாகனத்தில் மோதிய 29 வயது ஓட்டுநரை ராஸ் அல் கைமா காவல்துறை கைது செய்துள்ளது. ராஸ் அல் கைமா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் புலனாய்வு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் கேப்டன் அப்துல் ரஹ்மான் அஹ்மத் அல் ஷெஹி, தங்களுக்கு புகார் கிடைத்தவுடன், விபத்தை ஏற்படுத்திய நபரைக் கண்டறிய ஒரு குழு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து, விபத்துக்குப் காரணமாக இருந்த வாகனம் அடையாளம் காணப்பட்டது. விசாரணையின் பின்னர், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.