ADVERTISEMENT

UAE: துபாயில் சக ஊழியர் தூங்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபருக்கு சிறை தண்டனை விதிப்பு..!

Published: 10 Sep 2022, 11:01 AM |
Updated: 10 Sep 2022, 11:01 AM |
Posted By: admin

துபாயில் தனது சக பெண் ஊழியர் உள்ளாடையுடன் தூங்கும் வீடியோவைப் பகிர்ந்த 33 வயது ஓட்டுநருக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ வைரலானதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் வழக்குப் பதிவு செய்து, தனது அனுமதியின்றி வீடியோ கிளிப் வெளியிடப்பட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

குற்றம் சாட்டப்பட்டவர் அவரை அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ஓட்டுநர் என்று பாதிக்கப்பட்ட அப்பெண் அடையாளம் காட்டினார். சம்பவ தினத்தன்று காலையில் அப்பெணின் அறைக்கு சென்று நிதி இழப்பீடு பெற அந்த ஓட்டுநர் சென்றுள்ளார். அப்போது உள்ளாடையுடன் தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ஓட்டுநருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.