ADVERTISEMENT

UAE: எமிரேட்ஸ் டிராவில் 3வது முறையாக வெற்றிபெற்று அசத்திய இந்தியர்.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?

Published: 10 Sep 2022, 5:09 PM |
Updated: 10 Sep 2022, 5:09 PM |
Posted By: admin

சமீபத்தில் நடைபெற்ற எமிரேட்ஸ் வாராந்திர டிராவில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று அசத்தியுள்ளார். துபாயில் நடந்த 49வது எமிரேட்ஸ் டிராவில் ஷரீப் குனியா அப்துல்லா 77,777 திர்ஹம்ஸ் வென்றார்.

ADVERTISEMENT

இது குறித்து கூறிய ஷரீப் குனியா, “16வது முயற்சியில் இது எனது மூன்றாவது வெற்றியாகும். முதல் இரண்டு வெற்றிகள் சிறிய பரிசுத் தொகையாக இருந்தாலும், அவை என்னை உந்துதலாக வைத்திருந்தன, இந்த வெற்றி ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது,”   வெற்றிபெற்ற தொகையில் ஒரு சிறு வணிகத்தைத் தொடங்க  திட்டமிட்டுள்ளேன்என்று கூறினார்.

எமிரேட்ஸ் வாராந்திர டிரா 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 35 மில்லியன் டாலர்களை விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும். 25,000-க்கும் மேற்பட்ட பங்குபெற்று வெற்றி  பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT