ADVERTISEMENT

அமீரகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை..!!

Published: 22 Sep 2022, 8:45 PM |
Updated: 22 Sep 2022, 8:48 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாகவே அமீரகத்தில் தொடர்ந்து கன மழையும் ஆலங்கட்டி மழையும் பெய்து வந்த நிலையில் இன்றும் அதே வானிலை தொடர்ந்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று (புதன்கிழமை) அமீரகத்தின் மூன்று எமிரேட்களில் பலத்த மழை பெய்துள்ளது. துபாயின் முர்குவாப், ராஸ் அல் கைமாவின் ஷாவ்கா மற்றும் ஷார்ஜாவின் மிலிஹா மற்றும் மடம் ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கருத்துப்படி இன்று ராஸ் அல் கைமாவின் ஷாவ்காவில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின்படி, அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை) கோடை காலத்தின் கடைசி நாள் ஆகும். நாளை (வெள்ளிக்கிழமை) முதல், அமீரகத்தில் இலையுதிர் காலம் ஆரம்பிக்கவுள்ளது.

ADVERTISEMENT


இந்த நிலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனையடுத்து நாட்டின் சில பகுதிகளுக்கு NCM சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ராஸ் அல் கைமா மற்றும் அல் அய்ன் பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT