ADVERTISEMENT

UAE: தீபாவளியை முன்னிட்டு பல பள்ளிகளில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை..!! மாணவர்கள் உற்சாகம்..!!

Published: 20 Oct 2022, 1:42 PM |
Updated: 20 Oct 2022, 1:44 PM |
Posted By: admin

வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு துபாயில் உள்ள பல பள்ளிகள் இரண்டு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தீபாவளி பண்டிகையை தங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியோடு வீட்டில் கொண்டாடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விடுமுறை நாட்களானது திங்கள் மற்றும் செவ்வாய் (அக்டோபர் 24-25) ஆகிய இரு நாட்களாகும். சனி, ஞாயிறு விடுமுறையையும் சேர்த்தால், இந்தப் பள்ளிகளின் மாணவர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

சில பள்ளிகளுக்கு ஏற்கனவே பள்ளிகளில் தொடங்கியுள்ள இடைக்கால விடுமுறை (mid-term break) நாட்களிலேயே இந்த தீபாவளி விடுமுறையும் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில பள்ளிகள் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.

ADVERTISEMENT

இந்திய பாடத்திட்டம் இல்லாத பள்ளிகள் அக்டோபர் 24, திங்கட்கிழமை அன்று விடுமுறை அளிக்காவிடினும் அன்றைய நாளில் தீபாவளி தொடர்பான செயல்பாடுகளை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.