ADVERTISEMENT

தீபாவளியை முன்னிட்டு இலவச லைட் ஷோ நடத்தும் எக்ஸ்போ சிட்டி துபாய்..!!

Published: 22 Oct 2022, 7:34 PM |
Updated: 22 Oct 2022, 7:37 PM |
Posted By: admin

தீபாவளியை முன்னிட்டு துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. துபாய் எக்ஸ்போ சிட்டியின் அல் வாஸ்ல் டோமில் இன்று (அக்டோபர் 22) மற்றும் நாளை (அக்டோபர் 23) சிறப்பு காட்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

அதன்படி இன்று  இரவு 7.45 முதல் 8 மணி வரை முதல் காட்சியும், அதைத் தொடர்ந்து 9.12 முதல் 9.30 மணி வரை 18 நிமிட இரவு காட்சியும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் மாலை 6.30 முதல் 6.45 மணி வரையிலும், பின்னர் இரவு 7.40 முதல் 7.55 வரையிலும் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் எக்ஸ்போ சிட்டிக்கு செல்லும் பார்வையாளர்கள் இதனை இலவசமாக கண்டு களிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த எக்ஸ்போ சிட்டி துபாயானது கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இதில் Sustainability, Mobility, Vision, Women pavilion ஆகிய பெவிலியன்களுக்கு நுழைவுக் கட்டணங்களுடன் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.