ADVERTISEMENT

ஓமான்: உணவகத்தில் உள்ள கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் காயம்..!!

Published: 23 Oct 2022, 2:17 PM |
Updated: 23 Oct 2022, 2:19 PM |
Posted By: admin

ஓமானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உணவகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் எட்டு பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் இருக்கும் சீப் சிட்டியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (civil defence and ambulatory authority) கூறுகையில் இந்த விபத்துனால் எட்டு பேருக்கு கடுமையாக மற்றும் மிதமான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



ADVERTISEMENT

அத்துடன் “அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு பின் அவர்கள் தேவையான சிகிச்சையைப் பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் CDAA கூறியுள்ளது. இருப்பினும், விபத்து நடந்த உணவகம் பற்றிய எந்த விவரங்களையும் CDAA வெளியிடவில்லை.

ADVERTISEMENT