ADVERTISEMENT

துபாயின் முக்கிய சாலையில் விபத்து.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

Published: 1 Nov 2022, 4:48 PM |
Updated: 1 Nov 2022, 4:49 PM |
Posted By: admin

துபாயில் ஷேக் சையத் சாலையை நோக்கிய ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டில் (hessa street) இன்று (செவ்வாய்க்கிழமை) சாலை விபத்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு துபாய் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவலை 538 விபத்துக்கள் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக 10 பேர் இறந்ததாகவும், 367 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் ஒரு சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இந்த வார தொடக்கத்தில், ஷேக் முகமது பின் சையத் சாலையில் பல வாகனங்கள் மோதியதில், ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேர் காயம் அடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இரண்டு டிரக்குகள் மற்றும் நான்கு இலகு ரக வாகனங்கள் மோதிய இந்த விபத்தானது டெயில்கேட்டிங் (tailgate) காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT