ADVERTISEMENT

துபாய் ரன்: மக்களோடு மக்களாக ஓடிய துபாய் இளவரசர்..!! 193,000 பேர் கலந்து கொண்டு சாதனை..!!

Published: 20 Nov 2022, 5:10 PM |
Updated: 20 Nov 2022, 5:20 PM |
Posted By: admin

துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த துபாய் ரன் நிகழ்வில் 193,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் துபாயின் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் 193,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவு மக்கள் பங்கேற்ற நிகழ்வாக இது சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இவரின் பங்கேற்பானது துபாய் ரன்னில் கலந்துகொண்ட அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இந்த நிகழ்வில் 5 கிமீ பாதை, 10 கிமீ பாதை என இரு பாதைகள் அறிவிக்கப்பட்டு பங்கேற்பாளர்கள் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து ஓடலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற துபாய் ரன்னில் சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை கலந்து கொண்டது அனைவருக்குமே ஆர்வத்தை அளிக்கக்கூடியதாக இருந்தது.

ADVERTISEMENT

இதில் 193,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதையடுத்து அதற்கு தனது சமூக ஊடக பக்கத்தில் துபாய் இளவரசர் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.