ADVERTISEMENT

துபாய்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளை சார்பாக நடத்தப்பட்ட இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி..!!

Published: 2 Dec 2022, 5:53 PM |
Updated: 2 Dec 2022, 6:20 PM |
Posted By: admin

அமீரகத்தின் 51வது தேசிய தின விழாவை முன்னிட்டு துபாயில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளையின் சார்பாக இரத்த தான முகாம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தேமுதிக சார்பாக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி உள்ளனர்.

ADVERTISEMENT

இந்த இரத்த தான முகாமில் முன்னாள் துணை செயலாளர் தவசி முருகன் தலைமையில் அமீரக பிரிவு துணைச் செயலாளர்கள் அம்ஜத் அலி, சாகுல்  ஹமீத் மற்றும் முன்னாள் துணைச் செயலாளர் சகிலன், அமீரக பிரிவு பொருளாளர் வாகை சதீஷ்,  இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர், சகோதரி நைனா யாஸ்மீன்( AWS) பாஷா அவர்களும் சகாப்தம் மணி, நாகராஜ், கரிகாலன், ராமநாதபுரம் செந்தில், விஜய், தீபக், அருண் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளும் கலந்தகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT