ADVERTISEMENT

இனி இந்த நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு PCR சோதனை அறிக்கை கட்டாயம்..!!

Published: 29 Dec 2022, 8:51 PM |
Updated: 29 Dec 2022, 9:02 PM |
Posted By: admin

உலகின் சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக ஜனவரி 1, 2023 முதல் கொரோனா அதிகம் பாதித்துள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் இந்தியா வரும் பயணிகளுக்கு PCR சோதனையின் நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு எதிர்மறையான RT-PCR சோதனை அறிக்கைகள் கட்டாயமாகும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சக வட்டாரங்கள் இது பற்றி கூறுகையில், அடுத்த வாரம் முதல் இந்த பயணிகளுக்கு ஏர் சுவிதா படிவங்களை நிரப்புவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள கொரோனாவானது ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவிலும் அதிகரிக்கக் கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளதால் அடுத்த 40 நாட்கள் முக்கியமானதாக இருக்கும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் கொரோனா தொற்றுநோயின் முந்தைய போக்குகளை பகுப்பாய்வு செய்த பின்னர் இது மதிப்பீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டிசம்பர் 24 மற்றும் 26 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறைந்தது 39 சர்வதேச விமானப் பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இரு பயணிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT