ADVERTISEMENT

ஷார்ஜாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து..!!!

Published: 5 May 2020, 8:40 PM |
Updated: 5 May 2020, 8:40 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (5.5.2020) ஷார்ஜாவின் அல் நஹ்தா (Al Nahda) பகுதியில் உள்ள ‘அப்கோ’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஷார்ஜாவில் இருக்கும் தாஜ் பெங்களூர் உணவகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள கட்டிடத்தில் தீப்பிடித்ததாக அந்த காட்சியை பார்த்த குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ADVERTISEMENT

பல தீயணைப்பு இயந்திரங்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக போராடி வருவதாகவும் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் வசிப்பவர்கள் மற்றும் அதற்கருகில் இருக்கும் ஐந்து கட்டிடங்களில் வசிப்பவர்கள் என அனைவரும் அவர்கள் வசிக்கும் கட்டிடங்களில் இருந்து அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து ஏற்பட்ட உயரமான கட்டிடத்திலிருந்து விழும் நெருப்பினால் சிதைந்த பொருட்கள் கீழே விழுந்ததன் காரணமாக, அந்த கட்டிடத்திற்கு அருகாமையில் இருக்கும் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT