ADVERTISEMENT

பருவகாலம் தொடங்கியதை முன்னிட்டு ஓமானில் குவியும் சுற்றுலா பயணிகள்… போக்குவரத்து விதிமுறைகளை வெளியிட்டது அரசு..!!

Published: 22 Jul 2023, 11:39 AM |
Updated: 22 Jul 2023, 11:39 AM |
Posted By: admin

ஓமான் நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட, சாலை மார்க்கமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ராயல் ஓமான் காவல்துறை (ROP), பார்வையாளர்கள் போக்குவரத்து விதிமுறைகளையும், சாலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேகத்தையும் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

கரீஃப் பருவம் ஆரம்பித்துள்ளதால் தோஃபர் கவர்னரேட்டுக்கு, வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணற்ற மக்கள் தங்களது வாகனங்கள் மூலம் சாலை வழியாக சுற்றுலாவிற்காக வருகை தந்த வண்ணம் உள்ளனர். எனவே, இது குறித்து அல்-புரைமி கவர்னரேட் அதிகாரி கூறுகையில், பல்வேறு சாலை மார்க்கங்களின் வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கும், சுங்கம் தொடர்பான நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் ராயல் ஓமான் காவல்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு, பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதோடு, அவர்களால் எழுப்பப்படும் விசாரணைகளுக்கு பதில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரீஃப் பருவத்தை முன்னிட்டு, பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முன்னேற்பாடுகள் தயாராக உள்ளன என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

எனவே, சாலை மார்க்கமாக வருபவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முறையாக பராமரிக்கப்பட்ட வாகனத்தை எடுத்து வர வேண்டும் என்றும்,டயர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து பயணத்தின் பொழுது குறிப்பிட்ட வேகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் அதற்கு விதிக்கப்பட்ட குறிப்பிட்ட சுமையை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், டிரெய்லர்களைப் பொறுத்தவரை, வாகனத்தின் நம்பர் பிளேட் மற்றும் பின்புற விளக்குகள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அது மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களுடன் வீட்டு பணியாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோரை முறையான விசாவுடன் அழைத்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாவிற்காக வருகை தரும் பயணிகளுக்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அவசர தொலைபேசி (9999) மூலம் ராயல் ஓமன் காவல்துறையினை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.