ADVERTISEMENT

திருச்சியிலிருந்து இன்று ஷார்ஜா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசமரமாக கேரளாவில் தரையிறக்கம்..!! நடுவானில் ஏறபட்ட தொழில்நுட்ப கோளாறு..!!

Published: 31 Jul 2023, 1:35 PM |
Updated: 31 Jul 2023, 1:51 PM |
Posted By: admin

தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து இன்று ஜூலை 31 திங்கட்கிழமையன்று, ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ADVERTISEMENT

சுமார் 154 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் இன்று காலை 10.53 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸிற்கு சொந்தமான 613 என்ற விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்துள்ளார்.

பின்னர் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட வேண்டும் என்று கேரளாவில் உள்ள விமான கட்டுப்பாட்டு தளத்திற்கு விமானி தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விமானம் தரையிறங்குவதற்கான அவசரகால ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிக்கப்பட்டவுடன் விமானம் கிட்டத்தட்ட 50 நிமிடம் ஆகாயத்தில் பறந்த பின், பாதுகாப்பாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இன்று நண்பகலில் தரையிறங்கியது. மேலும் இதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.