ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று ஏற்பட்ட தீவிபத்து..!!

Published: 3 Aug 2023, 4:22 PM |
Updated: 3 Aug 2023, 4:41 PM |
Posted By: admin

அபுதாபியின் முசாஃபா பகுதியில் உள்ள வணிக கட்டிடம் ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த குடியிருப்பாளர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

முசாஃபாவில் இன்று பிற்பகல் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மற்றும் சிவில் தற்காப்பு அதிகாரிகள் விரைந்து வந்து கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்பொழுது அபுதாபி காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்பு ஆணையம் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் சமூக ஊடகங்களில், அதிகாரிகள் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT