ADVERTISEMENT

இரண்டே மாதங்களில் 100 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்..!! குவைத்தில் பின்பற்றப்படும் கடுமையான போக்குவரத்து விதிமுறைகள்..!!

Published: 18 Aug 2023, 9:25 PM |
Updated: 19 Aug 2023, 12:10 PM |
Posted By: admin

குவைத்தில் பின்பற்றப்படும் கடுமையான போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 100 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைகளில் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்ல தனிப்பட்ட வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும் என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

உள்துறை அமைச்சகத்தின் பொது போக்குவரத்து துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் யூசுப் அல் காதா, போக்குவரத்து ரோந்து அதிகாரிகள் போக்குவரத்து சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். குவைத் நாட்டை பொறுத்தவரை சாலைப் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தைப் பேணுவதற்கான முயற்சியில், அதிகாரிகள் ஒரு விரிவான திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்,

குறிப்பாக வெளிநாட்டு வாழ் மக்கள் அல்லது தொழிலாளர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் போக்குவரத்து விதி மீறல்கள் ஆராயப்படுகின்றன. எனவே, மக்களின் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடுமையான மீறல்களைச் செய்யும் வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்ள நேரிடும் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT