ADVERTISEMENT

இந்தியா, UAE இடையேயான சிறப்பு விமானங்கள் ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு.. நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!! இந்திய தூதர் தகவல்..!!

Published: 4 Aug 2020, 5:54 AM |
Updated: 4 Aug 2020, 6:08 AM |
Posted By: admin

இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே சிறப்பு விமானம் இயக்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இயக்கப்பட்ட சிறப்பு விமான நடவடிக்கைகள் தற்போது ஆகஸ்ட் 31 வரையிலும் செயல்படும் என்று இந்திய தூதர் பவன் கபூர் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த மாதம் ஜூலை 12 முதல் 26 வரையிலான இரண்டு வார காலத்திற்கு இந்தியா அமீரகம் இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தற்போது மேற்கண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இம்மாத இறுதி வரையிலும் (ஆகஸ்ட் 31) இயக்கப்படவிருக்கும் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 5) முதல் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலதித்துள்ள இந்திய தூதர், “இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையேயான பயணங்கள் தொடர்பான நடைமுறைகளை நாங்கள் எளிதாக்குகிறோம். இந்தியா மற்றும் UAE இடையே விமானங்களை இயக்கவிருக்கும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது பயண முகவர்கள் அல்லது டிக்கெட் அலுவலகங்கள் மூலமாகவோ உள்வருவதற்கும், வெளிசெல்வதற்குமான பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஜூலை 12 முதல் 26 வரை இயக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் மூலமாக சுமார் 23,000 முதல் 25,000 அமீரக குடியிருப்பாளர்கள் இந்தியாவில் இருந்து மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்துள்ளதாகவும், மேலும் பலர் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் பயண ஒப்புதலுக்காக (ICA & GDRFA) காத்திருக்கிறார்கள் என்றும் கபூர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப விரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் ICA வால் அங்கீகரிக்கப்பட்ட பியூர் ஹெல்த் நெட்வொர்க் (Purehealth) மூலமாக தங்களின் கொரோனா சோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற எந்தவொரு ஆய்வகத்திலும் பயணிகள் கோவிட் -19 சோதனையை நடத்த அனுமதிக்கும் புதிய விதிமுறை இந்தியர்களுக்கான பயணத்தை எளிதாக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT